For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

10:04 AM Feb 07, 2024 IST | Web Editor
 நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Advertisement

நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது என அரக்கோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை வந்த அண்ணாமலை,  அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.  அதில் அவர் பேசியதாவது:

"வரலாற்று சிறப்புமிக்க அரக்கோணம் தொகுதியில் என் மண என் மக்கள் யாத்திரையில்
புதிய அரசியல் வரலாறு படைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.  தக்கோலத்தில் ஜலநாத ஈஸ்வரர்,  கங்காதீஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.  இந்த கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை .  குறிப்பாக மும்பை - ராயபுரம் ரயில் பாதை அமைக்கும் போது அரக்கோணம் ரயில் நிலையத்தை தாண்டி ரயில் சென்றது.

ஆசியாவிலேயே மிக நீளமான விமான ஓடுதளம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் அமைந்துள்ளது.  இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய எப்சிஐ குடோன் அரக்கோணத்தில் உள்ளது.  இப்படி பல வரலாற்று சிறப்புகளை அரக்கோணம்
தொகுதி பெற்றுள்ளது.  189-வது தொகுதியாக என் மண் என் மக்கள் யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரை நாளுக்கு நாள் எழுச்சி அதிகமாகிக் கொண்டு செல்கிறது.

தமிழ்நாட்டின் குரலாக பாஜக உழைத்துக் கொண்டு இருக்கிறது.  32 மாதங்களாக திமுக அரசு செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டு பாஜக காட்டிக் கொண்டிருக்கிறது.  3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்று இந்த யாத்திரை எழுச்சி காட்டுகிறது. கிராமம், நகரம் என எந்த ஊராக இருந்தாலும் எழுச்சியாக உள்ளது.

அரக்கோணம் எம்பி ரூ.1250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.  ரூ.400 கோடி மருத்துவக் கல்லூரியில் டொனேஷன் வாங்கியதாகவும்,  சாராய ஆலையில் பொருட்கள் வாங்கியதாக ரூ.500 கோடி பொய்க்கணக்கு,  அறக்கட்டளை செலவினங்கள் ரூ.300 கோடியும்,  கல்லூரி புரோக்கர் கமிஷன் ரூ.25 கோடி,  கல்லூரி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியதாக ரூ.25 கோடி என மொத்தம் ரூ.1250 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் டி.ஆர்.  பாலு ஆகியோர் சாராய
தொழிற்சாலைகள் நடத்துகின்றனர்.  இவர்கள் நடத்தும் சாராய தொழிற்சாலைகளில் இருந்து மட்டுமே 42 சதவீதம் கொள்முதல் செய்யப்படுகிறது.  இதனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு வாய்ப்பே இல்லை.  தமிழ்நாட்டில் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் 20% பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்கள்.

இவர்களின் நோக்கமே நீட் இல்லாமல் போனால் பணம் சம்பாதிக்க முடியாது. 50
சதவீதம் தனியார் கல்லூரியில் சீட் கொடுத்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்க
நினைக்கின்றனர்.  நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது.  நீட் இருப்பதால் விவசாய
பெருமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பிள்ளைகளை அரசு
மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்கின்றனர்.

திமுக கூட்டணிக்குள் இப்போது சீட் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி
வளர்ந்த கட்சியாக மாறிவிட்டதாக சொல்லி 12 சீட் கேட்கிறார்கள்.  திருமாவளவன்
ராமர் கோயிலில் பிரதமர் மோடி பால பிரதிஷ்டை செய்ததை மோடிக்கு உள்ளே என்ன வேலை என்று கேள்வி எழுப்பினர்.  இரண்டிலிருந்து மூன்று சீட்டு வாங்குவதற்காக இப்படி அவர் பேசி வருகிறார். கம்யூனிஸ்டு கட்சியினர் எங்கு இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் தெரியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஜோதிமணிக்கும்,  கார்த்தி சிதம்பரத்திற்கும் சீட்  தரக் கூடாது என்று பிரச்னை செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு ரூ.19,936 கோடி வழங்கி
உள்ளது.  கிராம ஊராட்சியில் உள்ள பணத்தை அரசு கருவூலத்துக்கு திருப்ப அனுப்ப வேண்டும் என்று திமுக அரசு தெரிவிக்கிறது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முக்கியமான, தைரியமான முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.  அதன்படி லட்சம் கோடி செலவில் நதிநீர் இணைப்புக்காக காத்திருக்கிறோம்.  பல லட்சம் கோடி செலவில் அது நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

Tags :
Advertisement