"தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் உள்ளது" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது. 1862ல் அங்கு தீபம் ஏற்றப்பட்டுள்ளது. காவல்துறை எந்த வேலையும் செய்யாது, ஆனால் கோவிலுக்கு எதிரான எல்லா வேலைகளையும் செய்யும்.
காவல் துறையை வைத்து கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக. கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை. தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தேர்தல் நெருங்குவதால் திமுக நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். 144 தடை உத்தரவு போட என்ன அவசியம் வந்தது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தி இருந்தாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தி இருந்தாலும் வழக்கு போடலாம். திமுகவை வீழ்த்துவதற்கு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும். சிலர் கூட்டணியை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் அவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.