”அதிமுகவின் திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது”- பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அவர் சுற்றுப்பயணம் செய்தார்.பின்னர் பேசிய அவர்,
“அப்பாவின் பெயரை வைத்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் த திமுக கட்சி
தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ளார். ஆனால் நான் மக்களோடு மக்களாக இருந்து உழைப்பால் பதவி பெற்றுள்ளேன். திமுக செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே . திமுக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது.
2001 இல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் எமர்ஜென்சி, மிசாவை கொண்டு வந்தது. திமுக தலைவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
நாடு வளம் பெற வேண்டும்,மக்களுக்கு தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் உள்ள அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.63 ஆயிரம் கோடி மெட்ரோ ரயில் சேவைக்கு உள்துறை அமைச்சரே வந்து அடிகல் நாட்டினார்.
திமுக அரசு அரசு மருத்துவமனைகளை சரியாக பரிமரிக்க படவில்லை
இன்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் கை கால் உயிர் இல்லாமல் தான் வரவேண்டும். அதிமுக ஆட்சியில் 2 கையில் இல்லாத தொழிலாளி நீங்கள் நினைத்தால் எனக்கு 2 கைகள் பொருத்தலாம் என்று என்னிடம் மனு கொடுத்தார்.
அவருக்கு இறந்தவர் உடலில் இருந்து 2 கைகளை வெட்டி எடுத்து பொருத்தி இன்று
நன்றாக உள்ளார். அதிமுகவில் உழைப்பவர்கள் பெரிய பதவிகளை அடையாளம் அதற்க்கு நானே சாட்சி. திமுகவில் அனைத்து பதவிகளும் ஒரே குடும்பத்தில் முடிந்து விட்டது. வரும் சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.