For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக உள்ளது" - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசுவார்கள், ஆனால் வந்த பிறகு அதை செய்ய மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
07:46 AM Aug 24, 2025 IST | Web Editor
திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசுவார்கள், ஆனால் வந்த பிறகு அதை செய்ய மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
 குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக உள்ளது    எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Advertisement

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என தமிழகத்தின் 234 தொகுதிகளில் மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி,110 வது தொகுதியாக திருவெறும்பூர் தொகுதியில் பேசுகையில், "திமுகவின் 51 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா? கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் 505 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி வருகிறார்.

Advertisement

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அறிவிப்பு கொள்ளை புறத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. ஏழை எளிய தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் அரிசி, பருப்பு, உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிமுக ஆட்சி காலத்தில் விற்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறியதோடு அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் விண்ணை முட்டுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வெளி மாநிலங்களில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அவற்றை குறைவானவிலைக்கு மக்களைப் பாதிக்காத வகையிலும் வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிலைவாசி உயர்வை கட்டுப்பாட்டு வைத்திருந்ததோடு மக்களை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது.

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் எனக் கூறியது அமைச்சர் நேரு, எம்ஜிஆருக்கு பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது தற்பொழுது திமுகவிற்குஉள்ளதாக நேரு கூறினார். எம்ஜிஆருக்கு என தனி அடையாளம் உண்டு. அவருக்கு இணை எவருமே இல்லை. பிரதான
எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ, வினர் அழுத்தம் தந்ததால்தான் திமுக அரசு வேறு வழியின்றி உரிமைத் தொகை வழங்கியது. இதனைப் பெற்றுத் தந்த அதிமுக தான். பக்கத்து மாநிலமான கர்நாடக வில்ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே தனது வாக்குறுதியை நிறைவேற்றியது.

திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசும் ஆனால் வந்த பிறகு அதை செய்யாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர் மக்கள் படும் கஷ்டத்திற்காக கொடுக்கவில்லை தேர்தலை வருவதா அவர்கள் வழங்குகின்றனர். திமுக செல்வாக்கை இழந்து வருகிறது வரும் தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. டிஜிபி அறிவிப்பதில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை.

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்புமூன்று பேரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் அதில் ஒருவரை மத்திய அரசு நியமிக்கும் ஆனால் இந்த மாதம் 30 ஆம் தேதி டிஜிபி ஓய்வு பெற உள்ள நிலையில் இதுவரை மாநில அரசு யாரையும் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
ஏதோ கோளாறு உள்ளதுஇதற்கு என்ன காரணம் என்று அரசு விளக்க வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் போதை பொருளை கட்டுப்படுத்தி விட்டது கூறுகிறார்.

ஆனால் தினமும் செய்தித்தாள் போதை பொருட்கள் பிடிபட்டது வழக்குகள் பற்றிய செய்திகள் வருகிறது. திமுக ஆட்சி ஏற்ற ஒரு ஆண்டுகளையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது குறித்து அதிமுக எச்சரித்தது தமிழகத்தில் மாணவர்கள், பொதுமக்களில் பலரும் போதைப் பொருட்களில் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். நிலைமை கைமீறிப் போன நிலையில் உதயநிதி தலைமையில் உறுதிமொழி எடுக்கிறார்களாம். திமுக ஆட்சியில் முதியோர், காவல்துறை அதிகாரிகள், பெண்கள், மாணவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லை. கோடை கொள்ளை திருட்டு வழிப்பறி என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவும். அதனை சரி செய்யும்.

சிறுமி முதல் பெரியவர் வரை பாதுகாப்பு இல்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் அண்ணன் தம்பி இடப்பிரச்சனை விசாரிக்க சென்ற எஸ்ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்படி இருந்தால் தமிழகத்தை பாதுகாக்க ராணுவத்தை தான் கொண்டு வர வேண்டும் தமிழகத்தில் ஆறு மாதத்தில் ஆறு போல் காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் செயல்படாத அரசாக திமுக உள்ளது.

அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மேம்பட்டு விளங்கியது. ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியாகவும் நடுநிலைப்பள்ளிஉயர்நிலைப் பள்ளியாகவும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட தகசட்டமன்றத்தில் கூறுகிறார்.

தற்போதைய அரசு அரசாங்கத்திற்காக மக்களை பயன்படுத்துகிறது அதிமுக அரசு மக்களுக்கான அரசாக செயல்பட்டது. திமுகவில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என கூறுகின்றனர். அடிமை அமைச்சர்கள் கருணாநிதி குடும்பத்திற்கு எடுபுடி அமைச்சர்களாக அவர்கள் உள்ளனர் மக்களுக்கான அமைச்சர்களாக அதிமுக அமைச்சர்கள் இருந்தனர். கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூறிவிட்டு அமைச்சர்கள் பதவியில் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம் என் குடும்ப வாரிசு அரசியல் அதிமுகவில் கிடையாது கருணாநிதி குடும்பத்திற்கு தமிழகத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அது கார்ப்பரேட் கம்பெனி திமுகவில் ஸ்டாலின் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் கனிமொழி மகளிர் அணி செயலாளர் இப்படி ஒரே குடும்பமே அனைத்து பிரதான பொறுப்புகளையும் வைத்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். இங்கிருக்கும் அமைச்சர் துணை முதல்வருக்கு ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். அமைச்சர் என்று பிறகு அதில் தான் கவனம் செலுத்த வேண்டும் மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இங்கிருக்கும் வெல்க கம்பெனி உள்ள சிறுகுறி தொழில் செய்யும் கம்பெனிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது வீடு கடைகளுக்கு என மின் கட்டணம் தனித்தனியாக உள்ளது அதேபோல் மாநகராட்சிகளை சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக அரசு உள்ளது குப்பையை கூட விட்டு வைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement