For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு" - நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
11:34 AM Oct 18, 2025 IST | Web Editor
விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
 திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு    நயினார் நாகேந்திரன்
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

Advertisement

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்படுடையதல்ல. பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

எனவே, "டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement