Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தலுக்குப் பின் மோடி நாட்டை விட்டு வெளியேறி விடுவார் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

12:32 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட்டு வெளியேறிவிடுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈ.வெ.கி.சம்பத்தின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா மற்றும் முன்னாள் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“பிரதமர் நரேந்திர மோடி அடுத்த முறை தமிழ்நாடு வரும் போதும் தமிழர்களின் வரவேற்பு வேறு விதமாக இருக்கும். காங்கிரஸ் தான் திமுக, திமுகதான் காங்கிரஸ். மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் ஒற்றை கருத்து கொண்ட கட்சியாக இந்த இரு கட்சியினரும் உள்ளோம். வரும் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவில் குடியேறுவார்.

திமுக கூட்டணியில் 5 முறை தேர்தலை சந்தித்து வருகிறோம். திமுகவினர் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதிகள் பிரித்துக் கொடுத்து வருகின்றனர். காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தொகுதிகள் குறைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையில்லை”

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். 

Tags :
BJPCongressDMKElection2024EVKS ElangovanINC TamilnaduNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO India
Advertisement
Next Article