”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும்”- பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, உள்ளம் தேடி இல்லம் நாடி எனும்
பிரச்சாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரியலூர்
மாவட்டம் செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்து உரையாற்றினார்.
அப்போது அவர்,”தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும். அப்போது, அரியலூர் மாவட்டம் செந்துறை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். செந்துறையில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும். செந்துறையில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
செந்துறை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது. அந்த நிலை மாற்றப்படும். இங்குள்ள சிமென்ட் ஆலைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமைக்கு வலியுறுத்தப்படும். எனவே, தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் கழக பொருளாளர் சுதீஷ், மாவட்டச் செயலாளர்கள் அரியலூர்
ராம.ஜெயவேல்,பெரம்பலூர் அய்யப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து
கொண்டனர்.