For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

04:56 PM Dec 01, 2023 IST | Web Editor
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, இன்று  மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,  புழல்,  செம்பரம்பாக்கம் ஏரிகளில் கணிசமான நீர்வரத்து இருந்து வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,256 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால்  நேற்று  காலை 8 மணி முதல் விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 4000 கன அடியாக குறைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  ஏரிக்கு வரும் நீர் வரத்து அதன் பிறகு குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீர் விநாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டு இன்று மாலை வரை வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (டிச.1) 1000 கன அடி நீர் வரத்து இருந்து வரும் நிலையில்,  நீரின் அளவு மொத்த உயரம் 24 அடியில் 22.69 அடியை நெருங்கி உள்ளது.  இதனையடுத்து தற்போது 400 கன அடியாக  திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை,  இன்று மாலை 5 மணி முதல் 3000 கன அடியாக உயர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், செம்பரம்பாக்கம் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement