Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ArmstrongMurderCase - இயக்குநர் நெல்சனிடம் தீவிர விசாரணை!

01:36 PM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றது.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து நேற்று (ஆக. 23) அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் மிக உயரமான #Skydeck ! கோபுரம் கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முன்னாள் மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அடையாறில் உள்ள இயக்குனர் நெல்சன் வீட்டிற்குச் சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரமாக இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் இயக்குனர் நெல்சன் மனைவியின் நண்பர் என்பதால், ஏதேனும் தகவல் கிடைக்குமா? என்கிற காரணத்திற்க்காக இந்த  விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags :
ArmstrongArrestBahujanSamajPartyBSPCrimedirectorinvestigationnelsondilipkumarPoliceRowdySamboSenthil
Advertisement
Next Article