ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?
This news fact checked by Boom
காங். தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கரை பற்றி பேசியதற்காக, அவரை உத்தவ் தாக்கரே அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை நாலயக் (பயனற்றவர்) என்று அழைத்து, அவரை அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று, சமீபத்திய வைரலானது.
இந்த வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பில், இந்த வீடியோ பழையது என கண்டறியப்பட்டது. இந்தியா கூட்டணி உருவானதைத் தொடர்ந்து தாக்கரேவும் காந்தியும் கூட்டாளிகளாக மாறினர். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) மற்றும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் ஆகியவை இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணியாக 24 எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டன.
உண்மைச் சரிபார்ப்பு:
கூகுளில் வைரலான வீடியோவில் இருந்து சில முக்கிய பிரேம்களின் தலைகீழ் படத் தேடல் தொடங்கப்பட்டது. அதேபோல், யூடியூபில் இந்தியா டிவி பகிர்ந்த அறிக்கை கண்டறியப்பட்டது. அப்போது, இந்த வீடியோ டிசம்பர் 15, 2019 அன்று பகிரப்பட்டது என தெரியவந்தது. சாவர்க்கரை ஓடிப்போனவர் என்று அழைத்ததால், ராகுல் காந்தியை காலணியால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் கூறியிருந்தார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் உத்தவ் தாக்கரே ஆற்றிய முழு உரையை கிடைத்தது. இந்த வீடியோவின் 11:20 நிமிடங்களில், சாவர்க்கரை அவமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் ஐயர் மற்றும் ராகுல் காந்தியை தாக்கரே விமர்சிக்கத் தொடங்குகிறார். அப்போதுதான், சாவர்க்கரை ஓடிப்போனவர் என்று ராகுல் காந்தி கூறியதாக எதிர்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
ஜூலை 2023-ல் இந்தியா கூட்டணி உருவாக்கப்படுவதற்கு முன்பு, 2019 இல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வைரலான வீடியோ ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது.
முடிவு:
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை நாலயக் (பயனற்றவர்) என்று அழைத்து, அவரை அடிக்க வேண்டும் என்று கூறியதாக வைரலாகிவரும் வீடியோ பழையது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.