For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?

09:29 AM Jun 06, 2024 IST | Web Editor
இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி கே சிவக்குமார்  அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா  உண்மை என்ன
Advertisement

This news fact checked by Newsmeter

Advertisement

மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்குப்பின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக பரவிவரும் செய்தி தவறானது மற்றும் பழையது என்று கண்டறியப்பட்டது.

2024 ஆந்திர பிரதேச மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி  வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை விட இந்தியா கூட்டணி 40 இடங்களே குறைவாகவே உள்ளன. எனவே, கூட்டணிக்காக இந்தியா கூட்டணி தலைவர்கள் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை அணுகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் பின்னணியில், இந்தியா கூட்டணி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்த பழைய படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சந்திரபாபு நாயுடுவை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியதாக கூறப்படும் வீடியோ பரவி வருகிறது.

இதுகுறித்து ட்விட்டர் (எக்ஸ்) பயனர், “சந்திரபாபு நாயுடுவை இந்தியா கூட்டணிக்கு மாறுவதற்கும், ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக ஆதரிப்பதற்கும் சிவகுமார் சந்தித்தார்” என தலைப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதேபோல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது போன்ற புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை சரிபார்ப்பு:

டி.கே.சிவக்குமார் 2023 டிசம்பர் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த வீடியோ தற்போது வைரலாகிவருவதாக கண்டறியப்பட்டது. அதேபோல், அகிலேஷ் யாதவ் நாயுடுவைச் சந்தித்த படமும் பழையது என கண்டறியப்பட்டது.

சிவகுமார் நாயுடுவை சந்தித்தார்:

முக்கியமான வார்த்தைகளை கூகுளில் உள்ளிட்டு தேடியபோது லைவ் ஹிந்துஸ்தான், மேங்கோ நியூஸ் மற்றும் ஒன்இந்தியா தெலுங்கில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் கண்டறியப்பட்டன.

ஒன்இந்தியா தெலுங்கு வெளியிட்டுள்ள செய்தியின் படி, சந்திரபாபு நாயுடு பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவகுமாருடன் சுமுகமாக உரையாடினார். சிவகுமார் நாக்பூரில் காங்கிரஸ் தொடக்க நாள் பேரணிக்கு சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

டிசம்பர் 29, 2023 அன்று NDTV அறிக்கையின்படி, பெங்களூரு விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் சிவக்குமார் இடையேயான சந்திப்பு ஒரு தற்செயலான சந்திப்பாகும். இது 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் சமன்பாடுகள் பற்றிய ஊகங்களுக்கு வழிவகுத்தது. 

இதனிடையே, இந்த சந்திப்பு தற்செயலானது என்றும், இதில் எந்த அரசியல் அர்த்தமும் இல்லை என்றும், இந்த சந்திப்பில், தெலுங்கு தேசம் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று சந்திரபாபு நாயுடு கூறவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்:

தொடர்ந்து, ட்விட்டரில் மற்றொரு முக்கிய வார்த்தை தேடல் மேற்கொள்ளப்பட்டது. மே 18, 2019 அன்று அகிலேஷ் யாதவின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இரண்டு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பின் புகைப்படம் கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தார் என்றும், இந்த சந்திப்பு லக்னோவில் நடந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு:

தொடர்ந்து நேற்று (ஜூன் 5) வெளியிடப்பட்ட The Times of India மற்றும் NDTV அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டது. இந்த அறிக்கைகளின்படி, சந்திரபாபு நாயுடு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியுடன் உறுதியாக இருப்பதாக தெளிவுபடுத்தினார். பின்னர் என்டிஏ கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்றார்.

எனவே, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்திரபாபு நாயுடு சந்தித்ததாக வைரலாகிவரும் வீடியோவும், அகிலேஷ் யாதவை சந்திரபாபு நாயுடு சந்தித்த புகைப்படமும் பழையது என்று கண்டறியப்பட்டது. மேலும், 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த சந்திப்புகள் நடந்ததாகக் கூறுவது தவறானது எனவும் கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement