For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கௌதம் அதானியை அமெரிக்க போலீஸ் கைது செய்ததா? - வைரலாகும் படம் உண்மைதானா?

04:08 PM Nov 26, 2024 IST | Web Editor
கௌதம் அதானியை அமெரிக்க போலீஸ் கைது செய்ததா    வைரலாகும் படம் உண்மைதானா
Advertisement

This news Fact Checked by ‘Newsmeter

Advertisement

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல பில்லியன் டாலர் சூரிய ஆற்றல் திட்டத்தைப் பெறுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி, லஞ்சம் கொடுக்கும் திட்டத்தைத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களான அதானி கிரீன் மற்றும் அஸூர் பவர் ஆகியவை சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதானி குழுமம் அதன் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றது' என்று நிராகரித்துள்ளது. இந்நிலையில், கௌதம் அதானியை போலீசார் பொது இடத்தில் கைது செய்வதை காட்டும் AI-உருவாக்கப்பட்ட படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை ஆராய்வோம்.

உண்மை சரிபார்ப்பு :

அதானி குறித்த வைரலாகும் படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை AI உருவாக்கிய படங்கள் என்பதும் அவற்றில் ஒழுங்கற்ற விவரங்கள் அல்லது நம்பத்தகாத அம்சங்கள் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படத்தை நன்றாக கவனித்தால் அதானியின் கையைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு ஆறு விரல்கள் உள்ளன. (சிவப்பு வட்டத்தில் காட்டப்பட்டுள்ளது). அதானியின் மற்றோரு கை முற்றிலும் இல்லை.

ஒரு அதிகாரியின் இடது கண் (நீல வட்டத்துடன் குறிக்கப்பட்டுள்ளது) வலதுபுறத்துடன் முரணாக உள்ளது. அதிகாரிகளின் முகங்கள் (மஞ்சள் மற்றும் பச்சை வட்டங்களில் குறிக்கப்பட்டுள்ளன) சிதைந்து காணப்படுகின்றன. மேலும் மற்றொரு அதிகாரி (இளஞ்சிவப்பு வட்டத்தில் காட்டப்பட்டுள்ளது) முழு முகமுடியை அணிந்திருப்பது போல் தெரிகிறது. இருப்பினும் கேமராவால் க்ளிக் செய்யப்பட்ட படம் போல அல்லாமல் சிதைந்துள்ளது. இந்த முரண்கள் படத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை எழுப்புகின்றன.

இப்படம் செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறியும் டூல்களை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன் முடிவுகள் மேம்பட்ட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. ஹைவ் மாடரேஷன் அதை 99.9 சதவீத உறுதியுடன் டீப்ஃபேக் என அடையாளம் கண்டுள்ளது. அதே நேரத்தில் True Media இன் கண்டுபிடிப்பில் இது போலி என தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்பின் AI படங்கள் வைரலானது. இதேபோல பிரபலமான தலைவர்களின் AI ஆல் உருவாக்கப்பட்ட படங்கள் அவ்வபோது வைரலாவது வழக்கம். மார்ச் 2023 இல், டொனால்ட் டிரம்பின் AIல் உருவாக்கப்பட்ட மூன்று படங்களை பிபிசி நீக்கியது. இரண்டு போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்வதாகவும், மூன்றாவது அதிகாரிகள் அவரைத் துரத்துவதைக் அப்படம் காட்டியது. முதல் படம் டிரம்பின் வழக்கத்திற்கு மாறாக குறுகிய கை மற்றும் ஒரு அதிகாரி மீது சிதைந்த கை போன்ற முரண்பாடுகளை வெளிப்படுத்தியது. இரண்டாவதாக, இயற்கைக்கு மாறான தோல் நிறங்கள் மற்றும் மங்கலான முக அம்சங்களை தனித்து காட்டியது. மூன்றாவது படத்தில், துரத்தும் போலீஸ் அதிகாரி வேறு திசையில் பார்ப்பது போல் இடம்பெற்றது.

முடிவு :

பிரபல தொழிலதிபரான கௌதம் அதானி கைது செய்யப்பட்டதாக வைரலாகும் படம் AIஆல் உருவாக்கப்பட்ட படம் என்றும் அவை உண்மையானது இல்லை என்றும் தெளிவாகிறது.

Note : This story was originally published by Newsmeter and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement