‘உத்தரப்பிரதேசம், பீகார் மக்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்’ என ரமேஷ் பிதுரி தெரிவித்தாரா?
This News Fact Checked by ‘PTI’
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறியதாக பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில், இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை டெல்லியில் இருந்து விரட்ட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த விசாரணையில், செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட் எடிட் செய்யப்பட்டது என்றும், தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது என்றும் தெரியவந்தது.
ஸ்கிரீன்ஷாட் 2018 முதல் வைரலாகி வருகிறது. கல்காஜி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிதுரி, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான அதிஷி மற்றும் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா ஆகியோரிடம் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.
உண்மை சரிபார்ப்பு:
'ரவிஷ் குமார் பகடி' என்ற பெயரில் இயங்கும் ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர், கல்காஜி தொகுதியின் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படும் செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டை ஜனவரி 10 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவை இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
பதிவுக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
விசாரணை:
இதுகுறித்த முக்கிய வார்த்தையை கூகுளில் தேடியபோது, பல சமூக ஊடக பயனர்களால் இதே போன்ற பதிவுகள் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. அத்தகைய 2 பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம். மேலும் அதன் காப்பக பதிப்புகளை இங்கே காணலாம்.
மேலும் விசாரணையில், கூகுளில் முக்கிய வார்த்தை தேடலை நடத்தியதில், இதுகுறித்த எந்த செய்தி அறிக்கையும் கிடைக்கவில்லை. இது வைரல் கூற்றை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், தேடல் முடிவுகள், அக்டோபர் 13, 2018 தேதியிட்ட பிதுரியின் ட்விட்டர் பதிவை கண்டறிய உதவியது. அதில் அவர் உ.பி மற்றும் பீகார் மக்களுக்கு எதிராக கூறப்படும் கருத்துக்கள் தவறாகக் கூறப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.
பதிவுக்கான இணைப்பு இங்கே உள்ளது. அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:
அப்போது, டெல்லி பாஜக பிரிவும் அக்டோபர் 13, 2018 அன்று ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளது. பிதுரிக்குக் கூறப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று கூறியது.
"தங்கள் அரசியலுக்காக சமூகத்தை பிளவுபடுத்த விரும்புபவர்களால் நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பரப்பப்படுகிறது. இதற்கு பாஜக அல்லது அதன் தலைவர்கள் எவருக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று பாஜக டெல்லி பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவுக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:
விசாரணையின் அடுத்த பகுதியாக, பிதுரியை தொடர்பு கொண்ட போது, அவர் ஸ்கிரீன் ஷாட்டை "போலி" என்று மறுத்தார்.
மேலும், "இது ஆம் ஆத்மி கட்சி (AAP) சமூக ஊடகங்களில் பரப்பும் பொய்யான செய்தியாகும். இதே செய்தியை ஆம் ஆத்மி தலைவர்கள் முந்தைய தேர்தல்களில் எனது இமேஜை கெடுக்க பயன்படுத்தினார்கள். இருப்பினும், நான் எனது தொகுதி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன். அது போலியானது என்று அவர்களுக்குத் தெரியும்,” என்று ரமேஷ் பிதுரி கூறினார்.
இதையடுத்து, வைரலான ஸ்கிரீன் ஷாட் போலியானது என்று முடிவு செய்யப்பட்டது.
முடிவு:
பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்களை டெல்லியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியதாக வைரலாகி வரும் பதிவு, பொய்யானது மற்றும் சமூக ஊடகங்களில் போலி ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டு வருகிறது என தெரியவந்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.