பிரதமர் மோடியின் பிறந்த நாள் பரிசாக ஜெர்சியை அனுப்பிய மெஸ்ஸி!
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டனான வீரர் லியோனல் மெஸ்ஸி. உலகமெங்கும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள் மற்றும் 45 கோப்பைகளை வென்றுள்ளார். கடந்த 2022-இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் இவர் தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ள மெஸ்ஸி கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் விளையாட உள்ளார். மேலும் டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளுக்காக மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட 2022 FIFA அர்ஜென்டினா ஜெர்சியை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி செப்டம்பர் 17 ( நாளை ) ஆம் தேதி தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.