Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து கருத்து தெரிவித்தாரா?

05:41 PM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas News

Advertisement

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யான பிறகு கும்பமேளா குறித்து ட்வீட் செய்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

வயநாடு எம்.பி.யான காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயரில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டர் (எக்ஸ்) ஸ்ட்டின் ஸ்கிரீன்ஷாட்டில் ப்ரொஃபைல் பிக்ஸில் பிரியங்கா காந்தியின் படம் மற்றும் அக்கவுண்ட் பெயர் பிரியங்கா காந்தி ஐஎன்சி. ஸ்கிரீன்ஷாட்டில் ‘இந்தியாவில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால் அரச குளியளுக்கு கோடிகளை செலவிடுகிறது.’ என பதிவிடப்பட்டுள்ளது. எம்.பி.யான பிறகு பிரியங்கா காந்தி கும்பமேளா குறித்து இவ்வாறு பதிவிட்டதாக கூறப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில், பிரியங்கா காந்தியின் பெயரில் வைரலாகும் பதிவு போலியானது என்பது தெரியவந்துள்ளது. பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ பயனர் பெயர் @priyankagandhi, அதே நேரத்தில் வைரலான பதிவின் பயனர் பெயர் @PriyankagaINC. வைரல் பதிவுடன் பக்கமும் நீக்கப்பட்டது.

பயனர் இந்த பதிவை விஸ்வாஸ் நியூஸ் டிப்லைன் எண் 91 9599299372 க்கு அனுப்பி அதன் உண்மையை சரிபார்க்குமாறு கோரியுள்ளார்.

ஃபேஸ்புக் பயனர் உச்சராங் ஜேத்வா இந்த ஸ்கிரீன் ஷாட்டை (காப்பக இணைப்பு) டிசம்பர் 8 அன்று பகிர்ந்து, ”கும்பமேளா குறித்த பிரியங்கா வத்ராவின் முதல் ட்வீட். இந்துக்களுக்கு ஏதாவது புரிந்ததா? முதல் முறையாக எம்.பி.யானவுடன், சனாதன் மீது பிரியங்கா காந்தியின் நேரடி தாக்குதல். மக்கள் குடிநீருக்காக அல்லாமல், நயவஞ்சகர்கள் மற்றும் மோசடியாளர்களின் அரச குளியலுக்கு அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவு செய்யும் முட்டாள்களின் நாடு இந்தியா" என பதிவிட்டுள்ளார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டின் பயனர் பெயர் @PriyankagaINC என குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

வைரல் உரிமைகோரலைச் சரிபார்க்க, முதலில் Google இல் முக்கிய வார்த்தைகள் பயன்படுத்தி தேடப்பட்டது. இந்த ஸ்கிரீன் ஷாட் 2021-ம் ஆண்டிலும் வைரலானது தெரியவந்தது. Facebook பயனர் Real Tigers இதை பிப்ரவரி 14, 2021 அன்று பகிர்ந்துள்ளார் (காப்பக இணைப்பு).

இதற்குப் பிறகு, வைரலான ஸ்கிரீன்ஷாட்டின் @PriyankagaINC கணக்கைப் பற்றித் தேடியபோது, அது இல்லை என்பது கண்டறியப்பட்டது.

பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் @priyankagandhi ஆகும், இது பிப்ரவரி 2019 முதல் செயலில் உள்ளது மற்றும் சரிபார்க்கப்பட்டது.

https://twitter.com/priyankagandhi?ref_src=twsrc^tfw|twcamp^embeddedtimeline|twterm^screen-name:priyankagandhi|twcon^s2

வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவு நவம்பர் 23, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யனை தோற்கடித்தார்.

எம்.பி.யான பிறகு நவம்பர் 23-ம் தேதி வயநாடு மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/priyankagandhi/status/1860261035111854545

எம்.பி.யான பிறகு, அவரது கணக்கில் இருந்து கும்பமேளா குறித்து எந்த பதிவும் வெளியிடவில்லை.

டெல்லி காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் முதித் அகர்வால் கூறுகையில், பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ பயனர் பெயர் @priyankagandhi என்றும், வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பயனர் பெயர் வேறு. எனவே வைரலான ஸ்கிரீன்ஷாட் போலியானது என தெரிவித்தார்.

முன்னதாக 2021 இல், இந்த பதிவு வைரலானபோது, ​​விஸ்வாஸ் நியூஸ் ஆராய்ந்து, அதன் அறிக்கையை வெளியிட்டது.

 போலியான பதிவைப் பகிர்ந்த முகநூல் பயனாளியின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தபோது, சூரத்தில் வசிக்கும் பயனர் ஒரு சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டது.

முடிவு:

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யான பிறகு கும்பமேளா பற்றி எதுவும் பதிவிடவில்லை. வைரலான ஸ்கிரீன்ஷாட் போலியானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு தற்போது செயலில் இல்லை.

Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
CongressFact CheckINCKumbh MelaNews7Tamilpriyanka gandhiRoyal BathShakti Collective 2024Team ShaktiWayanad
Advertisement
Next Article