Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹைதராபாத் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு சம்பவம் நிகழ்ந்ததா? - நடந்தது என்ன?

09:45 AM May 16, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by FACTLY

Advertisement

ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, ஒரு நபர் மற்றவர்களின் வாக்குகளையும் பதிவு செய்ததாக பகிரப்பட்டு வரும் வீடியோ பழையது என்றும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் ஒரு நபர் மற்றவர்களின் வாக்குகளைப் பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஹைதராபாத்தில் உள்ள பஹதூரபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது, எடுக்கப்பட்ட வீடியோ என்று பகிரப்பட்டு வந்தது. இந்த வீடியோ குறித்த உண்மையை அறிந்துகொள்ள FACTLY சார்பில் முயற்சி செய்யப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

இந்த வைரல் வீடியோ பற்றி தெரிந்துகொள்ள வீடியோவின் கீ ஃப்ரேம்களை ரிவர்ஸ் முறையில் ஆராய்ச்சி செய்தபோது, இதே வீடியோ 2022-ம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று TV9 Bangla தொலைக்காட்சியின் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. TV9 Bangla வின் இந்த பதிவின்படி, இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் உள்ள சவுத் டம் டம் முன்சிபாலிடியில் உள்ள 33வது பிரிவில் உள்ள ஒரு பூத்தில் நடைபெற்றது என தெரியவந்தது.

அதே நேரத்தில் இந்த வைரல் வீடியோ பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இந்த சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் நிகழ்த்தப்பட்டது என பகிரப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, இந்த சம்பவம் பற்றி பல வங்க மொழி செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அந்த செய்திகளின்படி, 2022-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த நகராட்சி தேர்தலில், 33வது வார்டு, 106வது பூத் நம்பரில் சவுத் டம் டம் தொகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது. எனவே, இந்த வீடியோவிற்கும் மக்களவைத் தேர்தலில், ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என முடிவுக்கு வரப்பட்டது.

முடிவு:

இறுதியாக, மேற்கு வங்க நகராட்சித் தேர்தல் நேரத்தில் எடுத்து பகிரப்பட்ட இந்த பழைய வீடியோ பதிவிற்கும், ஹைதராபாத்தில் சமீபத்தில் முடிவடைந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வீடியோ மக்களை தவறாக வழிநடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘FACTLY’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.

Tags :
BJPCongressElections2024HyderabadLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesTMCWest bengal
Advertisement
Next Article