This News Fact Checked by ‘Boom’
சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு காணொளியில், ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர் சவுரப் பரத்வாஜ், ஐந்து ஆண்டுகளில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக யார் உறுதியளித்தார்கள் என iOS-ன் சிரியிடம் மேடையில் கேட்கிறார். அதற்கு சிரி ஆம் ஆத்மி தலைவர் "அரவிந்த் கெஜ்ரிவால்" என பதிலளிக்கிறது.
யமுனை நதி மாசுபடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு ஒரு உதாரணமாக இந்த வீடியோ பகிரப்பட்டது.
வைரலான வீடியோ அசல் சூழலை தவறாக சித்தரிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அசல் வீடியோவில் பரத்வாஜ் சிரியிடம் "இந்திய அரசியலில் ‘உத்தரவாதம்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது யார்" என்று கேட்பதைக் காணலாம். அதற்கு சிரி "ஆம் ஆத்மி கட்சி" என்று பதிலளிக்கிறது.
டெல்லியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக (BJP) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஆம் ஆத்மி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், யமுனையை சுத்தம் செய்வதற்கான காலக்கெடுவை அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளி வைத்துவிடுவார் என குற்றம் சாட்டினர். அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானா பாஜக அரசு டெல்லிக்கு வழங்கப்படும் யமுனை நீரில் "விஷம்" கலக்கிறது என சமீபத்தில் குற்றம் சாட்டினார். கெஜ்ரிவாலின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹரியானா அமைச்சர் விபுல் கோயல் மாநில அரசு வழக்குத் தொடரும் என்றும், தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கோரி கடிதம் அனுப்பியதாகவும் கூறினார்.
38 வினாடிகள் நீளமுள்ள இந்த வைரல் வீடியோவில், "ஐந்து ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வேன் (யமுனா 5 சால் மே சாஃப் கர் டெங்கே)" என்ற சொற்றொடரை சிரியிடம் யார் பயன்படுத்தினார்கள் என்று பரத்வாஜ் கேட்பதைக் கேட்கலாம். அந்த கேள்விக்கு சிரி பதிலளிக்கிறது. அதனை சுட்டிக்காட்டி, 2015ம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் இதை சொன்னதாகக் கூறுகிறார்.