அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?
This News Fact Checked by ‘Vishvas News’
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுடன் தொடர்புடைய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில பயனர்கள் அந்த ட்விட்டர் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து வருகின்றனர். ஸ்கிரீன்ஷாட்டில் சுயவிவரப் படத்தில் ரேகா குப்தாவின் படம் உள்ளது. அந்த கணக்கின் பெயர் ரேகா குப்தா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் வெற்றிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் வைத்திருந்த பட்டாசுகள் வீணாகிவிட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில பயனர்கள் இந்தப் பதிவைப் பகிர்ந்து, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இதனைப் பதிவிட்டதாகக் கூறி வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில், வைரல் பதிவு ரேகா குப்தாவின் பெயரில் உள்ள ஒரு போலி ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது தெரியவந்தது. ரேகா குப்தாவின் உண்மையான ட்விட்டர் முகவரி ரேகா குப்தா @gupta_rekha ஆகும். ஆனால் வைரல் பதிவு, ரேகா குப்தா @RekhaGuptaDelhi என்ற கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது. வைரலாகும் பதிவினை பதிவிட்ட ட்விட்டர் கணக்கின் பையோவில், ரேகா குப்தா பெயரில் உள்ள பகடிப் பக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் கணக்குப் பெயரில் இது ஒரு வர்ணனைப் பக்கம் என தெளிவாகத் தெரியவில்லை.
வைரல் பதிவு:
பேஸ்புக் பயனர் 'காஜல் குமார்’ பிப்ரவரி 24 அன்று ஸ்கிரீன்ஷாட்டை (காப்பக இணைப்பு) பகிர்ந்து, "அவர் டெல்லியின் முதலமைச்சர், பாவம்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்கிரீன்ஷாட்டின் சுயவிவரப் படத்தில் ரேகா குப்தாவின் படம் உள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் படம் உள்ளது, மேலும் அதில், "பாகிஸ்தானின் வெற்றிக்காக கெஜ்ரிவால் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் வீணாகிவிட்டன " என்று எழுதப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான பதிவை விசாரிக்க, முதலில் ஸ்கிரீன்ஷாட்டில் கொடுக்கப்பட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், இந்தப் பதிவு (காப்பக இணைப்பு) பிப்ரவரி 23 அன்று ரேகா குப்தாவின் ட்விட்டர் கணக்கான @RekhaGuptaDelhi இலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. பல பயனர்கள் இது ரேகா குப்தாவின் கணக்கு என்று நினைத்து அதில் கருத்து தெரிவித்துள்ளனர்.
केजरीवाल जी ने जो पटाखे पाकिस्तान की जीत पर फोड़ने के लिए रखे थे वह व्यर्थ हो गए ।#INDvsPAK 🔥🔥🔥 pic.twitter.com/pVp7uFqmGE
— Rekha Gupta Insight (@RekhaGuptaDelhi) February 23, 2025