For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக எம்பியும், BRS கட்சியின் சந்தோஷ் குமாரும் ஒரே மேடையில் தோன்றினார்களா? - வெட்டி ஒட்டப்பட்ட படம் வைரலானது எப்படி?

02:32 PM Nov 12, 2024 IST | Web Editor
பாஜக எம்பியும்  brs கட்சியின் சந்தோஷ் குமாரும் ஒரே மேடையில் தோன்றினார்களா    வெட்டி ஒட்டப்பட்ட படம் வைரலானது எப்படி
Advertisement

This news Fact Checked by  ‘Newsmeter’

Advertisement

திருமண வரவேற்பில் தெலங்கானா பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் தருமபுரியும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சந்தோஷ் குமாரும் ஒன்றாக மேடையை பகிர்ந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்.

தெலங்கான மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சார்ந்த தலைவர்களில் ஒருவரான மல்லா ரெட்டி இல்லத் திருமண விழா சமீபத்தில் நடைபெற்றது. மல்லா ரெட்டியின் பேத்தியான பவித்ரா ரெட்டிக்கும் ராகவ் ரெட்டிக்கும் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அக்டோபர் 28ஆம் நடைபெற்றது.

ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் நகரில் நடைபெற்ற இந்த வரவேற்பில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உட்பட தெலுங்கானாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்பில் நிஜாமாபாத் பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி மற்றும் பிஆர்எஸ் கட்சியின் தலைவரான கே சந்திரசேகர் ராவின் மருமகன் ஜே சந்தோஷ் குமார் ஆகியோர் புதுமணத் தம்பதிகளுடன் ஒரே மேடையில் பங்கேற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

ஹைதராபாத் ஃபெஸ்டிவல் வ்லாக்ஸ் ' எனும் யூடியூப் சேனல் திருமண வரவேற்பு வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த வீடியோவுக்கான Thumnail ல் பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி மற்றும் பிஆர்எஸ் கட்சியின் தலைவரான கே சந்திரசேகர் ராவின் மருமகன் ஜே சந்தோஷ் குமார் ஆகியோர் புதுமணத் தம்பதிகளுடன் ஒரே மேடையில் பங்கேற்பது போன்ற படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த சேனல் 6,55,000 சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. அதேபோல இந்த சேனல் பகிர்ந்த வீடியோ 61,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

உண்மை என்ன ?

இந்தப் படம் குறித்து உண்மை சரிபார்ப்பு சோதனைக்கு நியூஸ்மீட்டர் உட்படுத்தியது. ஆய்வின் முடிவில் அரவிந்த் தருமபுரி மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும், மணமக்களை வாழ்த்தும்போது இருவரும் ஒன்றாக மேடையை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

அதன்படி ஹைதராபாத் ஃபெஸ்டிவல் வ்லோக்ஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோவை உன்னிப்பாக ஆராய்ந்ததில் அரவிந்த் தருமபுரி மற்றும் சந்தோஷ் குமார் இருவரும் புதுமணத் தம்பதிகளுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் எங்கேயும் காணமுடியவில்லை. மாறாக தனித்தனியாக அவர்கள் இருவரும் மணமக்களிடம் வாழ்த்து தெரிவித்து படம் எடுத்துக் கொண்டனர். அதன்படி குமார் மணமகனையும் மணமகனையும் சந்திக்க ஏறக்குறைய சரியாக 3:48 நிமிடங்களில் சந்தோஷ் குமார் மேடையில் ஏறுகிறார். அதே நேரத்தில் பாஜக எம்பியான தருமபுரி 5:14 நிமிடங்களில் மேடையை அடைந்து மணமக்களை வாழ்த்துகிறார்.

சந்தோஷ் குமார் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதைக் காட்டும் கீஃப்ரேம் 4:11 நிமிடத்தில் உள்ளது. இந்த கீபிரேமில் அதே மலர் பின்னணி மற்றும் ஒரே மாதிரியான கை மற்றும் விரல் நிலைகள், அதே போல் குமார் மற்றும் மல்லா ரெட்டியின் முக மற்றும் உதடு வெளிப்பாடுகள் ஆகியவையும் ஒருபோல உள்ளன. அதேபோல புதுமணத் தம்பதிகளுடன் அரவிந்த் தருமபுரி போஸ் கொடுப்பதைக் காட்டும் கீஃப்ரேம் 5:30 நிமிடத்தில் வருகிறது.

எனவே, புதுமணத் தம்பதிகளுடன் அரவிந்த் தருமபுரியும் சந்தோஷ் குமாரும் ஒன்றாக போஸ் கொடுப்பதாகக் கூறி வைரலான படம் எடிட் செய்யப்பட்டது என்றும் , தனித்தனியாக சந்தித்த நிகழ்வுகளில் இடம்பெற்ற படங்களை ஒன்றாக இணைத்து எடிட் செய்து ஒன்றாக கலந்து கொண்டதுபோல பரப்பியுள்ளன என்பது தெளிவாக காண முடிகிறது.

முடிவு :

திருமண வரவேற்பில் தெலங்கானா பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் தருமபுரியும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சந்தோஷ் குமாரும் ஒன்றாக மேடையை பகிர்ந்து கொண்டதாக பரவும் படம் போலியானது என்றும் எடிட் செய்யப்பட்டது என்றும் நிரூபனமாகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement