For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பாஜக வேட்பாளர் மாதவி லதா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாரா? உண்மை என்ன?

09:17 AM Jun 16, 2024 IST | Web Editor
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு  பாஜக வேட்பாளர் மாதவி லதா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாரா  உண்மை என்ன
Advertisement

This news fact checked by Boom

Advertisement

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவி லதா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதாக வைரலாகிவரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் மாதவி லதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என்று அவர் கூறுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இதன்மூலம் தான் முன்பு அவமதித்த சமூகத்தைப் பற்றிய தனது கருத்தை மாதவி லதா மாற்றிக்கொண்டார் என்ற கூற்றுடன் இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

உண்மை சரிபார்ப்பு:

மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து போட்டியிட்ட மாதவி லதா 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பெண் முஸ்லிம் வாக்காளர்கள் பர்தாவைத் தூக்கி தங்கள் அடையாளத்தை நிரூபிக்கக் கோரிய சம்பவம் உட்பட, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் அறிக்கைகள் என மாதவி லதா பல்வேறு  விமர்சனங்கள் செய்துள்ளார்.

ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, “இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது” என்று கூறி லதா தனது முஸ்லிம் விரோதப் பேச்சை மாற்றியதாகக் கூறும் வகையில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பயனர் ஒருவர், “தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஞானம் கிடைத்தது” என தலைப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ ஏப்ரல் 2024-ல் மாதவி லதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் முக்கிய வார்த்தைகள் தேடல் செய்யப்பட்டது. அப்போது, மே 20 முதல் வைரலாகும் இந்த வீடியோ  ட்விட்டர் (எக்ஸ்) மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பல பதிவுகள் கண்டறியப்பட்டன.

தொடர்ந்து, கூகுளில் அசல் வீடியோவை தேடினோம். அப்போது, ஏப்ரல் 22, 2024 அன்று ஹைதராபாத் ஃபெஸ்டிவல்ஸ் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட பதிவு கண்டறியப்பட்டது. இந்த வீடியோ வைரலான கிளிப்புடன் சரியாகப் பொருந்தியது. அத்துடன், ‘ஹைதராபாத் பாஜக மாதவி லதா பேட்டி’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்த நேர்காணலின் முழுப் பதிப்பும் ஏப்ரல் 22, 2024 அன்று அதே சேனலால் பகிரப்பட்டது. அப்போது மாதவி லதா CAA மற்றும் முத்தலாக் போன்ற பிற விஷயங்களைப் பற்றி விவாதித்தார். வைரலாகிவரும் வீடியோ முழு வீடியோவில் 1:21 நிமிடங்களில் தொடங்குகிறது.

அப்போது, நேர்காணல் செய்பவர் மாதவி லதாவிடம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா என்று கேட்கிறார். இதற்கு மாதவி லதா, “இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் வறுமையால் பாதிக்கப்பட்ட, மதத்தின் பெயரால் தூண்டப்படும் குழந்தைகள், அவர்களின் மனம் எந்த திசையில் செல்லும்? வறுமையால் எதையும் செய்ய முடியும்" என தெரிவித்தார்.இந்த நேர்காணல் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு மே 13-ம் தேதி ஹைதராபாத்திற்கான மக்களவைத் தேர்தல் (4வது கட்டம்) நடைபெற்றது.

முடிவு:

எனவே, ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாதவி லதா, முஸ்லிம்கள் குறித்து பேசியதாக வைரலாகிவரும் வீடியோ தேர்தலுக்கு முந்தையது என கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement