சாவர்க்கர் குறித்து அண்ணாமலை இழிவாக பேசினாரா? : வைரலாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
This news fact checked by Newsmeter
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சாவர்க்கர் குறித்து விமர்சனம் செய்து பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.
அண்ணாமலை பேசியதாக பரவும் வைரல் வீடியோ
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்துத்துவ அமைப்பின் முன்னோடியாக சொல்லப்படும் வி.டி.சாவர்க்கரை பாஜக மாநிலத் தலைவர் இழிவுபடுத்தி பேசியதாக அந்த வீடியோவின் மூலம் உள்ளடக்கம் உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ தமிழகத்தில் வீர் சாவர்க்கர் குறித்து பொதுவாக என்ன சொல்வார்கள் எனில் பூட் லிக்கர் ஆஃப் பிரிட்டிஷ் ( பிரிட்டிஷாரின் காலணிகளை நக்கினார்” ) என்று கூறுவார்கள் என இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த வீடியோவில் காலபானி' என்ற மலையாள திரைப்படத்தில், நடிகர் மோகன்லால், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் காலணியை நக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
11 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் அண்ணாமலை பேசும்படியான காட்சிகளை X பயனர் பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த வீடியோவுக்கான கேப்சனில் "இந்த வீடியோவைத்தான் இரண்டு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். ஆட்டுக் குட்டி அண்ணாமலை பாஜகவில் சேரும் முன் சாவர்க்கரைப் பற்றிய பேசியவை” என குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலுக்கு உட்படுத்தியபோது Inside Tamil எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோவின் முழுமையான வீடியோவை காண முடிந்தது.
இந்த வீடியோ கடந்த அக்டோபர் 2, 2021 அன்று நடைபெற்ற சாவர்க்கர் புத்தக வெளியீட்டு விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்டது. சாவர்க்கர் புத்தகத்தின் வெளியீட்டாளரான பிரபா கைதான் அறக்கட்டளை புத்தக வெளியீட்டு விழா குறித்த விவரங்களை X இல் பகிர்ந்திருந்தார். அதில் இந்த வீடியோவின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் சரியாக 6:28 நிமிடத்தில், சாவர்க்கரைப் பற்றிய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "தமிழகத்தில், வீர் சாவர்க்கரைப் பற்றி பேசும்போது உடனடியாக அவரை விமர்சிக்கிறார்கள். அவர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர். ஆங்கிலேயரின் காலணிகளை வீர் சாவர்க்கர் நக்கினார் என்று சொல்வார்கள” என பேசியிருப்பார்.
அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டிய பகுதிதான் வைரலான கிளிப்பில் இடம்பெற்றது. ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதையும் கேட்டால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாவர்க்கரை புகழ்ந்தும் அவர் ஒரு சிறந்த நபர் என்றும் பேசியிருப்பார். பாஜகவில் சேர்வதற்கு முன்பு அண்ணாமலை சாவர்க்கரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டார் என சமூக வலைதளங்கள் எழுதி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
ஆனால் அண்ணாமலை ஆகஸ்ட் 25, 2020 அன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு கடந்த 2021ல் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
முடிவு:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சாவர்க்கர் குறித்து விமர்சனம் செய்து பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வ தகவல்களின்படி உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.