உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் - துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மக்கள் பாராட்ட வேண்டும், எனவும் உண்மை அறிந்து செயல்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசுக்கும், டெல்லியில் உள்ள NSKFDCக்கும் இடையே கழிவுநீர்
பராமரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி காமராஜர் மணிமண்டபத்தில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து, NSKFDCயுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது,
"புதுச்சேரியில் செயலர்கள் அவர்களின் துறைகளை பற்றி கவலைப்படுவதில்லை, செயலர்களுக்கே கவலை இல்லை, திட்டங்களை கொண்டு வந்து என்ன பயன் என்று சிந்திக்கும் நிலையில் நான் உள்ளேன்.
நகராட்சி ஆணையர்களின் பணி சரி இல்லை. செலவு செய்ய தயாராக உள்ளோம், ஆனால் பணி செய்ய ஊழியர்கள் தயாராக இல்லை. எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் பயன் பெறுவது ஊழியர்களிடமே உள்ளது. இதை நான் அவ்வபோது வலியுறுத்தி வருகிறேன். அதற்கேற்ப தலைமை செயலர், செயலர்கள் இருக்க வேண்டும் என்றும் நிறைய குறைபாடுகள் உள்ளது" இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது;
"தென் மாவட்டங்களில் மழை மிக அதிமாக தான் பெய்துள்ளது. இந்த அளவிற்கு மழை வரும் என்று எங்களுக்கு தெரியவில்லை என அரசு கூறுகிறார்கள், எந்த அளவிற்கு மழை
வந்தாலும் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும்" இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.