“தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்” - காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!
மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜிவ் பவனில் மறைந்த ராமமூர்த்தியின் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,
"விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக பேசினார். எதை வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஆனால் இந்துத்துவா சக்தியை, மதவாத சக்தியை அகற்ற வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அவருக்கும், அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும், எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.