For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

நடிகர் அஜித் குமாரின் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்ததையடுத்து, அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
03:05 PM Oct 05, 2025 IST | Web Editor
நடிகர் அஜித் குமாரின் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்ததையடுத்து, அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
Advertisement

நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய அணியினர் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்டு  3 ஆம் இடம் பிடித்து அசத்தினர். இதனை தொடர்ந்து  துணை முதல்வர் உதயநிதி, நடிகர் அஜித் குமார் அணியினருக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement