டெல்லி ரயில் நிலையம் மூடப்படுகிறதா? - ரயில்வே அமைச்சகம் விளக்கம்!
டெல்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக முழுமையாக மூடப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையம் முழுமையாக மூடப்படும் என்று சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், அந்த தகவல் தவறானது என்றும், டெல்லி ரயில் நிலையம் மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக முழுமையாக மூடப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
"ஒரு ரயில் நிலையம் மறுசீரமைக்கடும் போது, ஒரு சில ரயில்கள் தேவைக்கேற்ப திருப்பி விடப்படும் அல்லது ஒழுங்குபடுத்தப்படும். ரயில்களின் இத்தகைய மாற்றுப்பாதைகள்/விதிமுறைகள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். முன்னதாக, டெல்லி நிலையத்திலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டு ரயில் சேவைகள் ஆனந்த் விஹார், ஹஸ்ரத் நிஜாமுதீன், டெல்லி கன்டோன்மென்ட் மற்றும் சராய் ரோஹில்லா போன்ற ரயில் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவது குறித்து தகவல்களும் தவறானவை. இதுபோன்ற தவறான தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்!
ரயில்வே அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பதற்காக பணிகளுக்காக உட்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் 1,318 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் டெல்லி, டெல்லி கண்டோன்மென்ட், ஆனந்த் விஹார், குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் (NCR) நிலையங்கள் உள்ளன.