For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Delhi | பெண்ணின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய கேமிராக்கள் - வீட்டு உரிமையாளர் மகன் கைது!

08:22 AM Sep 25, 2024 IST | Web Editor
 delhi   பெண்ணின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய கேமிராக்கள்   வீட்டு உரிமையாளர் மகன் கைது
Advertisement

டெல்லியில் போட்டித்தேர்விற்கு படிக்கும் பெண் ஒருவரின் வீட்டில், ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணையில் வீட்டு உரிமையாளரின் மகனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் ஷகர்பூர் பகுதியில் UPSC போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவி ஒருவர் வசித்துவந்தார். இவர் தனது வாட்ஸ்அப் கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு தென்படுவதாக கண்டறிந்துள்ளார். எனவே, அவர் தனது மொபைலுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற சாதனங்களை சரிபார்த்துள்ளார். அப்போது யாருடையது அறியாத மடிக்கணினி ஒன்றுடன் தனது வாட்ஸ்அப் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதை அவர் கண்டறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.

இந்த செயலா சந்தேகம் அடைந்த அப்பெண் பாதுகாப்பற்றதாக உணர்ந்துள்ளார். பின்னர் தனது அபார்ட்மெண்டில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்று முழுமையாக சோதனை செய்துள்ளார். அப்போது, அவரது குளியலறையின் பல்ப் ஹோல்டரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவைக் கண்டுபிடித்தார். இதனால் பயமடைந்த அப்பெண், காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளார். போலீஸார் அந்த வீட்டில் நடத்திய சோதனையில், அவரது படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கேமரா கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் தனது வீட்டின் சாவியை அருகில் மாடியில் வசிக்கும் தனது வீட்டு உரிமையாளரின் மகன் கரண் என்பவரிடம் அடிக்கடி ஒப்படைத்துள்ளது கண்டறியப்பட்டது. கரணிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதை கரண் ஒப்புக்கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு, அப்பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, ​​​​அவர் 3 ஸ்பை கேமராக்களை வாங்கி அவளது படுக்கையறை மற்றும் குளியலறையில் பொருத்தியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், மின்சார சாதனங்களை பழுதுபார்க்க வேண்டும் எனக்கூறி கரண் அவ்வப்போது வீட்டு சாவியை பலமுறை வாங்கியுள்ளதாகவும், இதனால் அபார்ட்மெண்ட்டை அணுகவும், கேமராக்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றவும் கரணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கரண் வசம் இருந்து ஒரு கேமராவையும், சட்டவிரோத காட்சிகளை சேமிக்கப் பயன்படுத்திய இரண்டு மடிக்கணினிகளையும் போலீசார் மீட்டனர்.

30 வயது பட்டதாரியான கரண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், கடந்த 7 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement