பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு!
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது.
27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று (பிப்.21) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
ரேகா குப்தா முதலமைச்சராக பதவியேற்ற பின் பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.