Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு!

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
12:41 PM Aug 21, 2025 IST | Web Editor
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement

டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ரேகா குப்தா உள்ளார். நேற்று  காலை முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை கடுமையாகத் தாக்கினார். இதனால் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்.இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில் முதல்வரை தாக்கிய ராஜேஷ் கிம்ஜி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் குஜாராத மா நிலத்தை சேர்ந்தவர் என்றும் நாய் பிரியர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் டெல்லியில் சுற்றி திரியும் தெருநாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து  காப்பங்களில் அடைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பிற்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா வரவேற்ப்பு தெரிவித்திருந்தார். இதானால் நாய்கள் மீதான அன்பினால் ராஜேஷ் முதலவரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ராஜேஷின் தாயார தன் மகன்Delhi Chief Minister Rekha Gupta gets 'Z' category security! அப்பாவி என்றும் அவரை மன்னிக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்பு கருதி இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. முன்னதாக தில்லி காவல்துறையினர் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

Tags :
DelhilatestNewsrekhaguptastreydogssupremcourt
Advertisement
Next Article