Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி சட்டமன்ற தேர்தல் - பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி!

டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.
10:16 AM Jan 08, 2025 IST | Web Editor
Advertisement

டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

Advertisement

டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்.8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனவும் தெரிவித்தது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்து போட்டி என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

"டெல்லி சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 5, 2025 அன்று ஒரே கட்டமாக நடைபெறும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் முழு தயார் நிலையிலும், பலத்துடனும் போராடுகிறது. இந்தத் தேர்தலில் கட்சி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

தேர்தல்கள் ஜனநாயகத்தின் முதுகெலும்பு, மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி என்ற வகையில், இந்த தேர்தல்கள் வகுப்புவாதம் மற்றும் அரசாங்க இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவது உட்பட பிற எதிர்மறை தாக்கங்களில் இருந்து விடுபடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்புடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “மற்ற கட்சிகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கு திசைதிரும்ப வேண்டாம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :
assembly electionsBahujan Samaj PartyDelhiMayawati
Advertisement
Next Article