For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்!

11:58 AM Jun 07, 2024 IST | Web Editor
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன்
Advertisement

பாஜக தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரானார்.  அப்போது அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

Advertisement

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜகவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விளம்பரங்களில் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தவறான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

"ஊழல் விகித அட்டை" என்ற தலைப்பில் வெளியான விளம்பரங்களில்,  பாஜகவின் பசவராஜ் பொம்மை அரசு "40 சதவீத கமிஷன் சர்க்காரா" (அரசாங்கம்) என்று குற்றம் சாட்டியது கர்நாடக காங்கிரஸ்.

மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா ஆகியோர் மூலம் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.

இந்த விளம்பரங்களில் ஒன்றை ராகுல் காந்தி தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்திருந்தார்.  இந்த வழக்கில், ஜூன் 1ஆம் தேதி, தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்,  ஜூன் 7ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி,  இவ்வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினர். அவருக்கு டி.கே.சுரேஷின் பாதுகாப்பில் ஜாமீன் வழங்கி, வழக்கு அடுத்த விசாரணைக்கு ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
Advertisement