விமான நிலையத்தில் பரிசோதனை கருவிகள் பொருத்தக் காலக்கெடு நீட்டிப்பு!
டெல்லி விமான நிலையத்தில் முழு உடல் சோதனை கருவிகள் 2024 மே மாதத்துக்குள் அமைக்கப்படும் என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநர் ஜெனரல் ஜுல்பிகர் ஹாசன், உள்ளமைப்பு சிக்கல்களால் முழு உடல் பரிசோதனை கருவிகள் மற்றும் சிடிஎக்ஸ் ஸ்கேனர்களை விமான நிலையங்களில் அமைக்கும் காலக் கெடு நீடிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வந்தது அதிரடி அறிவிப்பு! – மெட்ரோ ரயிலில் பயணிக்க ரூ.5 போதும்!…
இது குறித்து மூத்த அதிகாரி கூறியதாவது; "இவற்றை அமைப்பதற்கான காலக்கெடு டிச.31-ல் முடிவடைகிறது. கணினி தளக்கதிர்படவியல் (Tomography X-ray) தொழில்நுட்பக் கருவி (சிடிஎக்ஸ்) பயன்பாட்டில், விமான நிலையச் சோதனைகளில் பயணிகள் தங்கள் பைகளில் உள்ள எலெக்ட்ரானிக் பொருள்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமிருக்காது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும், இவை டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அமைக்கப்படவுள்ளன" என தெரிவித்துள்ளார்.