கரையை கடக்கத் தொடங்கிய மோன்தா புயல்...!
வங்க கடலில் உருவான மோன்தா புயலானது ஆந்திராவின் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
08:14 PM Oct 28, 2025 IST | Web Editor
Advertisement
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
Advertisement
இந்த நிலையில் மோன்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்படி தற்போது மோன்தா புயலானது ஆந்திராவின் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 90 -100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.