Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர்" - மல்லிகார்ஜுன கார்கே

12:24 PM Nov 24, 2023 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ராகுல் காந்தியின் விமர்சனத்தில் எந்த பிரச்னையும் இல்லை.
தேர்தலுக்காக அவரின் விமர்சனத்தை மிகைப்படுத்தி புகார் கூறியுள்ளனர்.  தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக உரிய முறையில் விளக்கம் அளிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

மேலும் பேசிய அவர்,  "அரசு நிறுவனங்களின் மூலம் மக்களை அச்சுறுத்த பாஜக முயற்சித்து வருகிறது.  அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறது" என்று கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை 'கொள்ளையடிப்பவர்', 'பெரும் தொழிலதிபர்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவர்' என பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு சனிக்கிழமை (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டபேரவைக்கு நாளை (நவ.25) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags :
BJPCongressMallikarjun Khargenews7 tamilNews7 Tamil UpdatesPrime Minister ModiRahul gandhi
Advertisement
Next Article