Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி - ஆந்திராவில் கைது...!

04:35 PM Nov 08, 2023 IST | Student Reporter
Advertisement

கடலூரில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

Advertisement

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள் அரசு. இவர் கடந்த 2014-ம் ஆண்டு உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். அப்போது அங்கு சென்ற தேவனாம்பட்டினம் போட்மேன் தெருவை சேர்ந்த கணேஷ், உணவகத்தில் இருந்த அருள் அரசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அருள் அரசு, கணேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முன்விரோதம் காரணமாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் கணேஷ், அருள் அரசை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், குற்றவாளி கணேஷ் தலைமறைவானார்.

இதையும் படியுங்கள் : நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், கணேஷ் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிசார் ஆந்திரா விரைந்து சென்று கணேஷை கைது செய்தனர். பின்னர், அவரை கடலூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
20149 yearsArrestCuddaloreculpritMurderPolice
Advertisement
Next Article