For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்!

09:42 AM Jun 03, 2024 IST | Web Editor
நாளை வாக்கு எண்ணிக்கை  தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படவுள்ள நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது  தொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது :

"தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு முடிவடைந்து சுமார் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  இந்த மையங்களின் அனைத்து நடவடிக்கைகளும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.  அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.  தபால் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு அதிகாரபூர்வ முடிவுகள் வெளியான பிறகே,  மின்னணு இயந்திரத்தின் கடைசி சுற்று வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

இதையும் படியுங்கள் :கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 4,500 நுண்பார்வையாளர்கள் உள்பட 38, 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக விடியோ பதிவு செய்யப்படவுள்ளது.  39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் அமைந்துள்ள, 43 கட்டடங்களின் 234 அறைகளில் நடைபெறவுள்ளன.

அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.  வாக்கு எண்ணிக்கை பணியில் 10,000 பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24,000 பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான இறுதி கட்டப் பயிற்சி இன்று (ஜூன் 3) நடைபெறவுள்ளது"

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement