அரசியலமைப்பு தினம் ; அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்ப்பதில் உறுதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தேசிய அரசியலமைப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை கௌரவிப்பதற்கும், குடிமக்களிடையே அரசியலமைப்பு மீதான உரிமைகள் மற்றும் கடமைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. ஒரு கலாச்சாரத்திற்கோ அல்லது ஒரு சித்தாந்தத்திற்க சொந்தமானது அல்ல. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் எங்கள் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
நமது அரசியலமைப்பிற்கானஉண்மையான நினைவுகூறலென்பது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை குறித்து அஞ்சுபவர்களிடமிருந்து நமது குடியரசைப் பாதுகாப்பதாகும்" என்று தெரிவித்துள்ளார்.