Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் : கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவு!

12:02 PM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 288 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில், கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது.  அதன்படி,  மொத்தமுள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும்,  அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

Tags :
BJPCongressElections with News7 tamilIndiaKarnatakandaParliament Elections2024
Advertisement
Next Article