Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் | புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி!

10:22 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

57 வேட்பாளர்கள் கொண்ட மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

Advertisement

நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது . இதற்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மேலும் 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவையின் 543 தொகுதிகளில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அணைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தயார்ப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்குக் காங்கிரஸ் இதுவரை 138 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதல் பட்டியலில் 39 வேட்பாளர்களும், இரண்டாவது பட்டியலில் 43 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட்டியலின்படி, அரணாச்சலப் பிரதேசத்தில் 2, குஜராத்தில் 11, கர்நாடகாவில் 17, மகாராஷ்டிராவில் 7, ராஜஸ்தானில் 5, தெலுங்கானாவில் 5, மேற்கு வங்கத்தில் 8,  புதுச்சேரியில் 1 என அறிவிக்கப்பட்டுள்ளது .

அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நபம் துகி அருணாச்சல மேற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அமித் சவான் ஆனந்த் தொகுதியிலும், மூத்த தலைவர் சுக்ராம் ரத்வா சோட்டா உதய்பூரிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் கங்காநகரில் குல்தீப் இந்தோரா, பாலியில் சங்கீதா பெனிவால், ஜலவர் பரனில் ஊர்மிளா ஜெயின் பாயா, ஜெய்ப்பூரில் சுனில் ஷர்மா ஆகியோர் களத்தில் உள்ளனர். ராஜஸ்தானின் சிகார் தொகுதி சிபிஐ(எம்) கட்சிக்கு விடப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் நாகேந்திராவுக்கும், செவெல்லா தொகுதியில் ரஞ்சித் ரெட்டிக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் ரெட்டி சமீபத்தில் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் பிரணிதி ஷிண்டே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தின் மால்டா தெற்கு தொகுதியில் இருந்து தற்போதைய எம்பி அபு ஹாசிம் கான் சவுத்ரிக்கு பதிலாக, அவரது மகன் இசா கான் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ரஹ்மான் கானின் மகன் மன்சூர் கானுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணாவுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

Tags :
candidates listCongressElection2024INDIA AlliancePuducherry
Advertisement
Next Article