For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

07:59 PM Mar 12, 2024 IST | Web Editor
வெளியானது காங்கிரஸ் கட்சியின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்வது குறித்து மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

43 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில், அதன்படி அசாம் மாநிலத்தில் 12 தொகுதி, குஜராத் மாநிலத்தில் 7 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 10, ராஜஸ்தானில் 10, உத்தரகாண்ட்டில் 3 மற்றும் டையூ-டாமன் தொகுதி என மொத்தம் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வேட்பாளர்களில் 25 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அசாம் மாநிலம் ஜோர்காட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நகுல் நாத் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது அங்கு சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் அந்த மாநிலத்தின் ஜாலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement