கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்! - #police தடியடி!
முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையும் படியுங்கள் : “தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி” – இசையமைப்பாளர் #Yuvan நெகிழ்ச்சிப் பதிவு!
போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். இவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.