Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி - ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

12:17 PM Feb 24, 2024 IST | Jeni
Advertisement

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில், 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி புது டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. சாந்தினி சவுக்., வட கிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

அதேபோல், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், 24 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய 2 தொகுதிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில், காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. குருக்ஷேத்ரா தொகுதி மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்

மேலும், சண்டிகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட உள்ளார். அதேபோல் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. இதன்மூலம் குஜராத், ஹரியானா, டெல்லி, கோவா, சண்டிகர் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

Tags :
AAPChandigarhCongressDelhiElection2024Elections2024GoaGujaratharyanaRahulGandhi
Advertisement
Next Article