”மக்கள் மீது காங்கிரஸ் அதிக வரியை சுமத்தியது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
பிரதமர் மோடி இன்று அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் இன்று ரூ.5,100 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து இட்டா நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
”வடகிழக்கு மாநிலங்களை டெல்லியில் இருந்து அபிவிருத்தி செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அடிக்கடி அந்தப் பகுதிக்கு அனுப்பினேன்., பிரதமராக நானே வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறைக்கு மேல் வந்ததுள்ளேன்.
கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரசின் இயல்பான பழக்கம். காங்கிரஸின் இந்தப் பழக்கம் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் முழு வடகிழக்குப் பகுதிக்கும் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவித்தது. மலைப்பாங்கான மற்றும் வனப்பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள் சவாலானதாக இருந்ததால், காங்கிரஸ் அந்தப் பகுதிகளை பின்தங்கியதாக அறிவித்து அவற்றை மறந்துவிடும். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் மக்கள் இரட்டைப் பரிசை பெறுவார்கள். இன்று, நாடு முழுவதும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சமையலறை பட்ஜெட்டைக் குறைக்கும், பெண்களுக்கு உதவும். முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் வரிகளை அதிகரித்துக் கொண்டே இருந்தது. காங்கிரஸ் மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்தியது, ஆனால் எங்கள் அரசாங்கம் படிப்படியாக வரிகளைக் குறைத்து. எல்லை கிராமங்களை அடுத்தடுத்த காங்கிரஸ் அரசாங்கங்கள் புறக்கணித்தன. இதனால் இந்த பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததனர். அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு மக்களவை இடங்கள் மட்டுமே இருப்பதால், காங்கிரஸ் அதை புறக்கணித்தது.
2014 இல் தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, நாட்டை காங்கிரஸின் மனநிலையிலிருந்து விடுவிக்க நான் தீர்மானித்தேன். முதலில் தேசம் என்பதே எங்கள் வழிகாட்டும் கொள்கை. எங்கள் ஒரே மந்திரம் குடிமக்களே கடவுள் ஆகும். அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியின் போது புறக்கணிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசம், 2014 முதல் வளர்ச்சிக்கான முன்னுரிமை மையமாக மாறியுள்ளது. பிரதமர் வெளியிட்ட திட்டங்கள் இரட்டை இயந்திர அரசாங்கத்தின் இரட்டை நன்மைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. கடந்த 10 ஆண்டுகளில் அருணாச்சலத்திற்கு மத்திய அரசிடமிருந்து ரூ. 1 லட்சம் கோடி நிதி கிடைத்தது, இது காங்கிரஸ் ஆட்சியின் போது பெற்றதை விட 16 மடங்கு அதிகம்" என்றார்.