For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்!” - விஜய் வசந்த் எம்.பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

06:36 PM Feb 24, 2024 IST | Jeni
“விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் ”    விஜய் வசந்த் எம் பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
Advertisement

விஜயரதரணியின் துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள், அவரால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை என கன்னியாகுமரியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் பலர் கட்சித்தாவலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சிலர் மாற்று கட்சிகளுக்கு செல்வதாக தகவல்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், அதன் காரணமான அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி விஜய் வசந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ்-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்த போது எம்.பி விஜய் வசந்த் கூறியதாவது:

விஜயதரணி மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். அவரால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. ஏற்கனவே தொகுதியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இல்லை. மூன்றாவது முறை போட்டியிட வாய்ப்பு கேட்கும் போதும் கட்சி யோசித்து தான் சீட் கொடுத்தார்கள். அவர் பாஜகவில் இணைந்ததால் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும். அதற்காக தான் காங்கிரஸ் கட்சி மீது அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Tags :
Advertisement