For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'நாட்டுக்காக நன்கொடை' திட்டம் மூலம் ரூ.10 கோடி திரட்டிய காங்கிரஸ்!

04:37 PM Jan 03, 2024 IST | Web Editor
 நாட்டுக்காக நன்கொடை  திட்டம் மூலம் ரூ 10 கோடி திரட்டிய காங்கிரஸ்
Advertisement

காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடந்த மாதம் துவங்கி வைத்த நாட்டுக்காக நன்கொடை எனும் மக்களிடம் நன்கொடை திரட்டும் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.10.15 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.  இதையொட்டி நாட்டுக்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரில் மக்களிடம் டிஜிட்டல் முறையில் நிதி சேகரிக்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது.  மக்கள் 138-ன் மடங்குகளில் நன்கொடையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதாவது 138, 1380 13800 என்ற மடங்குகளாக கொடை பெறப்பட்டது.  கட்சியை வலுப்படுத்தி வளம் மிகு இந்தியாவையும் சமமான வளங்கள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  மக்களிடம் நிதி சேகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில்,  நிதி சேகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 2 வாரங்களில் ரூ.10.15 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.  விரைவில் துவங்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நிதி சேகரிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: “வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்பது தவறானது!” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அதிக தொகை வசூல் செய்யப்பட்ட மாநிலமாக தெலங்கானாவும்,  அதைத் தொடர்ந்து ஹரியானா 2-வது இடத்திலும் இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பொருளாளரான அஜய் மக்கான் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ரூ.1.72 கோடியும்,  ஹரியானாவில் ரூ.1.21 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் அதிக தொகை வசூல் செய்யப்பட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா, ஹரியானா, மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்,  'காங்கிரஸ் மக்களிடம் நன்கொடை கேட்பது இதுவே முதல்முறை.  பணக்காரர்களை சார்ந்து வேலை செய்தால்,  அவர்களின் கொள்கைகளும் நம்மீது திணிக்கப்படும்.  சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி கூட மக்களிடம் நன்கொடை பெற்றிருக்கிறார்.' என தெரிவித்தார்.

Tags :
Advertisement