For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொலம்பியா பல்கலை.யில் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மரியாதை - புகைப்படங்கள் வைரல்!

11:50 AM Jun 07, 2024 IST | Web Editor
கொலம்பியா பல்கலை யில் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட்  அஜித் அகர்கர் மரியாதை   புகைப்படங்கள் வைரல்
Advertisement

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட்,  அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  அதன்படி,  ஜூன் 5ம் தேதி நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனையடுத்து இந்திய அணி ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.  இந்த போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி தற்போது அமெரிக்காவில் உள்ளது.  டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,  தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட்,  அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.  ராகுல் டிராவிட்,  அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement