For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் சரிந்த தேர்தல் பிரசார மேடை! - காயமின்றி தப்பிய ராகுல்காந்தி!

09:53 PM May 27, 2024 IST | Web Editor
பீகாரில் சரிந்த தேர்தல் பிரசார மேடை    காயமின்றி தப்பிய ராகுல்காந்தி
Advertisement

பீகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேர்தல் பிரசார மேடை சரிந்ததில் ராகுல் காந்தி காயமின்றி தப்பினார்.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது. இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

பீகாரின் தலைநகர் பாட்னா புறநகர்ப் பகுதியில் உள்ள பாலிகஞ்ச் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசினார்.

இதையும் படியுங்கள் : “18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்நிலையில், பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த மேடையின் ஒரு பகுதி தொய்வடைந்து சரிந்ததை கண்ட மிசா பாரதி, ராகுல் காந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு, மேடையில் இருந்து கீழே அழைத்துச் சென்றார். சுதாரித்துக் கொண்ட ராகுல் காந்தியும், பொதுமக்களுக்கு கையசைத்த படியே மேடையில் இருந்து கீழே இறங்கினார். தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்ட மேடையின் ஒரு பகுதி சரிந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement