"கோவை அதிமுகவின் கோட்டை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று மாலை புலியகுளம் பகுதியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவருடன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார். தொடர்ந்து வானதி சீனிவாசன் பேசுகையில், "தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை வருக வருக என வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது மக்கள் விரோத ஆட்சி.
இந்த மாவட்ட தொழில்துறையினர் இந்த ஆட்சியின் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஓர் அணியிலிருந்து இருந்து திமுக ஆட்சியை விரட்டுவோம். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது தேச விரோத ஆட்சி. மத்தியிலிருந்து கொடுக்கின்ற நிதிக்கு சரியான கணக்கு கேட்டால், போதிய நிதி வரவில்லை என்கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று தான் புயல் மையம் கொண்டதாக இருந்தது. அது இன்று சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோவை அதிமுகவின் கோட்டை. சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. பாஜகவினரும், அதிமுக தொண்டர்களும் நாட்டுக்காக தங்களை அர்பணித்து உழைக்கிறவர்கள்.
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என சிந்திக்கின்ற மக்கள் கோவை மக்கள். தமிழகம் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருப்பதற்கு பாஜக அரசு ஒரு காரணம். கோவையில் கட்டப்பட்டு வரும் அவிநாசி பாலம் ஆமை வேகத்தில் நடக்கிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதையின் பாதையில் செல்லாதே என்று ஒரு முதல்வரே சொல்கிறார். அந்த அளவிற்கு போதை பொருள் விற்பனை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது.
எதாவது ஒரு பெரிய திட்டம் கோவைக்கு கொண்டு வந்திருக்கிறர்களா. தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. புதிதாக திறக்கப்பட்ட அரசு கல்லூரிகளுக்கு இன்னும் முதல்வர்கள் நியமிக்கபடவில்லை. இன்னும் 4 லட்சத்து 60 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் இன்னும் நிரப்படாமல் உள்ளது. கடன் வாங்குவதில் இந்தியாவிலே இவர் தான் சூப்பர் முதல்வர். ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகியும் இதுவரை கடனை குறைக்க வில்லை.
கடனை நீங்கள் குறைக்க வேண்டாம். கடன் வாங்கமால் இருந்தால் நல்லது. தமிழகத்தில் இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகள் மீதும் கடன் உள்ளது. அதிமுக போராடிய பிறகே பெண்களுக்கு 28 மாதங்கள் கழித்து தான் மாதம் 1000 ரூபாய் கொடுத்தார்கள். ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும் என்பதால் மேலும் 30 லட்சம் குடும்ப பெண்களுக்கு உரிமை தொகை கொடுக்கிறார்கள்.
இந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். மாதம் மாதம் கப்பம் கட்டினால் தான் திமுகவில் அமைச்சராக இருக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்றவரே இன்று கோவையில் பொறுப்பாளராக இருக்கிறார்கள்.
கொள்ளையடித்த பணத்தை கோவையில் கொட்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் 10 ரூபாய்க்கும் இன்று மதிப்புள்ளது. அதற்கு பெயர் போனவர் தான் இங்கு பொறுப்பாளராக இருக்கிறார். நீ முதலில் திருந்து அப்புறம் எங்களிடம் வா என்று செந்தில் பாலஜிடம் சொல்வார்கள்.
டாஸ்மார்க் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி. ஊழலுக்காக வளர்க்கபட்ட ஒரே இயக்கம் இந்தியாவில் அது திமுக தான். நாங்கள் பிரச்சாரம் செய்யும் போது தெரு விளக்கை அனைக்கிறார்கள். அப்போதே நாங்கள் வெற்றி பெட்டோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை 2026 நிரூப்பிப்போம். வீறு கொண்டு எழுவோம் வீழ்ந்த தமிழகத்தை மீட்போம். கூட்டணி கட்சியினர் அவர்கள் நிற்கும் சின்னத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.