For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘மூடா’ ஊழல் புகார் - #Siddaramaiah மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

05:20 PM Aug 19, 2024 IST | Web Editor
‘மூடா’ ஊழல் புகார்    siddaramaiah மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

Advertisement

கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உள்ளது. இந்த வாரியம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்தராமையா இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தனது அரசியல் வாழ்கையில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஒருபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை எனவும், அமைச்சராக இருந்த போதும் இப்போது முதலமைச்சராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜக போராட்டத்தை நிராகரித்த அவர், "அரசியலில் கட்சிகள் போராட்டம் நடத்துவது இயல்புதான். இதனால் அவர்கள் போராட்டம் நடத்துவது என்றால் நடத்தட்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் எனக்குக் கவலை இல்லை. நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் நான் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அது விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதில் எனக்குச் சாதகமாகவே இடைக்கால நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆளுநர் எனக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதித்த வழக்கு நிச்சயம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.

ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்தே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (ஆக. 19) காலை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டரில் ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்த மூடா வீட்டு மனை ஒதுக்கீடு குறித்தும் சித்தராமையா விளக்கமளித்தார். தனது மனைவி பார்வதி பெயரிலான 3.14 ஏக்கர் நிலத்தை மூடா நிறுவனம்தான் ஆக்கிரமித்து இருந்தது என்றும், இதற்கு இழப்பீடாகவே 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் விசாரணைக்கு அனுமதி அளித்ததற்கு எதிராகவும் காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தியது.

இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், ஆளுநரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

Tags :
Advertisement