“குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்!
தமிழ்நாட்டில் மும்மொழி தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், 2வது மொழியான ஆங்கிலத்தை முதலில் அனைவருக்கும் ஒழுங்காக கற்பியுங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
முதல் மொழி தாய் மொழி. அதில் எதுவும் சர்ச்சையில்லை. அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும். நம் மாநிலத்திலாவது இரண்டாவது மொழி ஆங்கிலத்தை கற்பிக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் பல மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முயற்சியே செய்யவில்லை. இதில் மூன்றாவது மொழி எங்கு வந்தது.
இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்ற வேண்டும். அதன்பிறகு மூன்றாவது மொழி, ஏன் நான்காவது மொழிகள் குறித்து சிந்திக்கலாம். மூன்றாவது, நான்காவது மொழிகள் எல்லாம் நம் எதிரிகள் இல்லை. முதலில் நம்முடைய குழந்தைகளுக்கு இரண்டாவது மொழியைக் கற்றுக் கொடுங்கள் என்று சிதம்பரம் கூறினார்.