முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லி பயணம்?
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 நாள் சுற்றுப்பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையும் படியுங்கள் : “மனமார்ந்த பாராட்டுகள்” – 10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
மேலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து, அவர், படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார். பின்னர் 5 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை புறப்பட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் மே 24ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.